மதுரையில் முறைகேடாக கிரனைட் கற்கள் வெட்டி எடுத்தது தொடர்பாக பி.ஆர்.பழனிச்சாமியின் மகன் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மைத்துனர் தெய்வேந்திரன், மேலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட மேலும் 8 பேரையும் கீழவளவு காவலர்கள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 9 பேரிடம் அய்யப்பன் திருப்பதி காவல்நிலையத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்பர் சேட் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர்.