தேனி மாவட்ட வனப்பகுதியில், கடந்த ஐந்து நாட்களாக காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. கோடைக்காலம் தொடங்கியுள்ளதையடுத்து, இதுபோன்று தீ விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
போடி, தேனி, கம்பம் உள்ளிட்ட வனப்பகுதிகளில், கடந்த ஐந்து நாட்களாக காட்டுத் தீ எரிந்துக் கொண்டிருக்கிறது. இதில் சிக்கி ஏராளமான உயிரினங்கள் மற்றும் அரியவகை மரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க, யானை, காட்டெருமை போன்ற விலங்கினங்கள் ஊருக்குள் வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தீயை அணைக்கவும், ஊருக்குள் வரும் வனவிலங்குகளை தடுக்கவும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.