தேனி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பருவமழை பொய்த்ததன் காரணமாக கண்மாய்கள், நீர் நிலைகள் ஆகியவற்றில் நீர் இல்லாமல் வறண்டு போனதால் மழை நீரையும், கண்மாய் நீரையும் நம்பி விவசாயப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கபட்டனர்.
இந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேனி ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாசன கிணறுகளுக்கு நீர் ஆதாரத்தை ஏற்படுத்த 35 தடுப்பணைகள் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள போதிலும், பணிகள் துவக்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.