Color Socrling

தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9941681652e-mail : info@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9941681652 e-mail : info@thagavalthalam.com
Showing posts with label தேனியில் தரமற்ற நிலையில் சாலைகள்- பொதுமக்கள் புகார். Show all posts
Showing posts with label தேனியில் தரமற்ற நிலையில் சாலைகள்- பொதுமக்கள் புகார். Show all posts

தேனியில் தரமற்ற நிலையில் சாலைகள்- பொதுமக்கள் புகார்


       தேனி நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார்சாலைகள் தரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேனியில் கடந்த சில ஆண்டுகளாக புதிதாக சாலைகள் போடப்படாத நிலையில் பாதாள சாக்கடைக்காக வெட்டப்பட்ட குழிகளால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதென பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் 8.25 கோடி ரூபாய் மதிப்பீட்டி‌ல் இரண்டு அடுக்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகர உள் கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைபெறும் இப்பணியின் மூலம் 12 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கபப்ட உள்ளது.

இந்நிலையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலைகள் தரம் குறைந்து காணப்படுவதாகவும், சாலை அமைக்கும் போது வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடமால அதே வழியில அனுமதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா