Color Socrling

தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9941681652e-mail : info@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9941681652 e-mail : info@thagavalthalam.com
சேலம் , தேனியில் புதிய தலைமுறை தமிழன் விருதுகள் பரிந்துரை வாகனம்





  சேலத்தில் நடைபெற்ற புதிய தலைமுறையின் தமிழன் விருதுகளுக்கான பரிந்துரை சேகரிப்பு பயணத்தை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துச்செழியன் துவக்கி வைத்தார்
  இலக்கியம், சமூக சேவை, தொழில், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு புதிய தலைமுறை கடந்த ஆண்டில் இருந்து தமிழன் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுகளுக்கு பல்வேறு மாவட்ட பொதுமக்களும் தங்களுடைய பரிந்துரைகளை ஆர்வமுடன் வழங்கி வருகின்றனர். பரிந்துரைகளை சேகரிக்கும் பொருட்டு இன்று
சேலம் மற்றும் தேனியில் வாக்குகள் சேகரிக்கப்பட்டன. சேலம் வந்த புதிய தலைமுறை வாகனம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தனது சேகரிப்பை துவக்கியது.

  பல்கலைக்கழக மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் பரிந்துரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்தனர். தொடர்ந்து சேலத்தின் பல்வேறு கல்லூரிகளுக்கும் சென்ற புதிய தலைமுறை வாகனத்தை வரவேற்ற மாணவ மாணவியர்கள் தங்கள் பரிந்துரை விண்ணப்பங்களை உற்சாகத்தோடு பூர்த்தி செய்தனர் .
  இதே போல் தேனி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தமிழன் விருதுகளுக்கான பரிந்துரைகள் சேகரிக்கப்பட்டன.



                                                           -இணைய செய்தியாளர்-தேனி ராஜா



------------------------------------------------------------------------------------------------------------



   ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவைச் சேர்ந்த முதல் நூறு பிரபலங்களின் பட்டியலில், வருமான அடிப்படையில் நடிகர் ஷாரூக் கான் முதலிடத்தை பிடித்துள்ளார்.
  பிரபல ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ், திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள், விளையாட்டு வீரர்கள், உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் பிரபலமான நூறு பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வருமானம் மற்றும் பிரபலம் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், இந்தி நடிகர் சல்மான் கான் இரண்டாம் இடத்திலும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
   பிரபலமானவர்கள் அடிப்படையில் சல்மான் கானும், தோனியும் ஷாரூக் கானை விட முன்னணியில் இருந்தாலும், 2011 அக்டோபர் முதல் 2012 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், ஷாரூக் கான் 202 கோடியே 80 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளதால், அவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
   அதே காலகட்டத்தில், சல்மான் 144 கோடி ரூபாயும், தோனி 135 கோடியே 16லட்சம் ரூபாயும் வருமானம் ஈட்டியுள்ளனர். இவர்கள் தவிர, அக்சய் குமார், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், கரீனா கபூர், விராத் கோஹ்லி, கத்ரினா கைப் ஆகியோர் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளனர்.
   ஒவ்வொரு துறையிலும் முதலிடத்தில் உள்ளவர்கள் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதில், விளையாட்டு வீரர்களில் தோனி முதலிடத்தில் உள்ளார்.
இசையமைப்பாளர் பிரிவில் முதலிடத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான், 
     ஒட்டுமொத்த பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார்,சாய்னா நேவால், விராத் கோஹ்லி, அனுஷ்கா சர்மா, சானியா மிர்சா உள்ளிட்ட 12 பேர், முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்ற இளம் வயதினர்.
                                             -இணைய செய்தியாளர்-தேனி ராஜா