பிஆர்பி கிரனைட் நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி உட்பட 131 பேருக்கு முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மூன்று வாரங்கள் ஞாயிற்று கிழமைகள் தோறும், பிஆர் பழனிச்சாமி காவல்நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் தவிர மற்றவர்கள்,15 நாட்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கையெழுத்திடவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டார்.
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா
--------------------------------------------------------------------------------------------------------------------------
பள்ளிகளின் மெத்தனப்போக்கு: மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் எச்சரிக்கை
--------------------------------------------------------------------------------------------------------------------------
பள்ளிகளின் மெத்தனப்போக்கு: மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் எச்சரிக்கை
மாணவர்களின் பாதுகாப்பு நலனில் மெத்தனப் போக்குடன் செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்ககம் எச்சரித்துள்ளது.
மேலும், ஊத்தங்கரை கிறிஸ்து மெட்ரிகுலேஷன் பள்ளியில் 4 வயது மாணவி, கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது, ஈரோடு மாவட்டம் தாளவாடியில் டிவைன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி கார் மோதி உயிரிழந்தது ஆகிய சம்பவங்கள் பள்ளி நிர்வாகங்களின் மெத்தனப் போக்கை உறுதி செய்வதாக உள்ளது என்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்து பள்ளியை மூட ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது, என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களின் பெற்றோரைக் கொண்ட அன்னையர் குழு மூலம் வாரந்தோறும் பள்ளிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா