முல்லைப் பெரியாறு அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால், அதை நம்பி
இரண்டாம் போகம் பயிரிட வேண்டாம் என விவசாயிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள்
கேட்டுக்கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்ற விவசாயிகளுடனான கலந்துரையாடல்
கூட்டத்தில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. இரண்டாம் போகத்திற்கான நடவுப்
பணிகளை தொடங்கிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்ததை அடுத்து, தற்போது
வெளியேற்றப்பட்டு வரும் தண்ணீரின் அளவை 480 கன அடியில் இருந்து 300 கன
அடியாக குறைத்து கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித்துறை
அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
எனினும் 50 நாட்களுக்கு மட்டுமே இந்த தண்ணீர் கிடைக்கும் என்பதால்,
இரண்டாம் போக விவசாயத்தில் பாதிப்பு இருக்கும் என்று விவசாயிகள் கவலை
தெரிவித்துள்ளனர். இன்றைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் 118 அடி
நீர் இருப்பு உள்ளது. 108 அடி வரை மட்டுமே நீர் எடுக்க முடியும்.
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா