குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கக் கோரி போடி அருகே கிராம
மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக
பாதிக்கப்பட்டது.
போடி- உத்தமபாளையம் சாலையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால், போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படாததால், அப்பகுதி மக்கள் அருகில் உள்ள விவசாயப் பாசன மின் மோட்டார்களில் குடிநீரைப் பிடித்து சமாளித்து வந்தனர்.

ஆனால் தற்போது நிலவும் கடும் மின்வெட்டு காரணமாக மோட்டார்களிலும்
தண்ணீர் பிடிக்க முடியாத சூழ்ந்லை ஏற்பட்டது. இது குறித்து ஊராட்சித்
தலைவரிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அதனைக்
கண்டித்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சு
வார்த்தை நடத்தியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா