தேனி மாவட்டத்தில் ஒன்பது மாத குழந்தையைக் கடத்த முயன்ற நபரை பொது மக்கள் விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தேனி மாவட்டம் அருகில் உள்ள இடுக்கி முண்டகயத்தைச் சேர்ந்த ஜோபின், சுஜி
தம்பதிகளின் மகள் ஓவியா. ஜோபின் வேலைக்கு சென்றபின், சுஜி வீட்டு வேலைகளை
செய்து கொண்டிருந்த போது குழந்தை அழும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தார்.
வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணாததால் உடனடியாக
தெருவுக்கு வந்து பார்த்தார். அப்போது குழந்தையை ஒரு ஆள் தூக்கிக் கொண்டு
ஓடுவது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர் சத்தம்போட்டு அக்கம் பக்கத்தினரை
அழைக்கவே, பொது மக்கள் குழந்தையை கடத்திய நபரை விரட்டிப் பிடித்து போலீசில்
ஒப்படைத்தனர்.
விசாரனையில் அந்த நபர் தன் பெயர் சிவன் என்றும், கோயிலாண்டி கிராமத்தைச்
சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு சென்று விசாரித்தபோது
அந்த நபர் தெரிவித்தது பொய்யான தகவல் எனத் தெரிய வந்தது. அதனால் அந்த
நபரிடம் காவல் துறையினர் மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா