கிரனைட் முறைகேடு புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிஆர் பழனிச்சாமி,
மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை
விசாரித்த நீதிபதி ஜெயக்குமார், மேலும், 14 வழக்குகள் அவர் மீது உள்ளதாக
தெரிவித்து வரும் 23 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மதிய உணவு இடைவேளியின் போது, பழனிச்சாமி காவல் துறை
வாகனத்தில் அமர்ந்திருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை
அளித்தனர். இதனைத் தொடர்ந்து. பழனிச்சாமி மதுரை அரசு மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். முழுமையாக உடல் நலமடைந்த பின்னரே
பாளையங்கோட்டை சிறைக்க அழைத்து செல்ல வேண்டும் என்று நீதிபதி
உத்தரவிட்டார்.
இதனிடையே, பி.ஆர்.பி நிறுவனத்திற்கு சொந்தமான 4 பேருந்துகள் மற்றும்
ஜி.ஜி. கிரனைட் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு பேருந்துகளையும் விடுவிக்க
உத்தரவிட்டார்.