தேனி மாவட்டம், பெரியகுளத்தில் முருகமலை ஐந்து வீடு என்ற இடத்தில் வசிக்கும் A.அன்னாள் குளோநி பாய் என்று ஒரு 65 வயது மதிக்கத் தக்க பெண்மணி எங்களிடம் அழுது ஒப்பிவித்த சங்கதிகளும் நாங்கள் நேரில் கண்டறிந்த செய்திகளும். இவர்கள் தங்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்கள் தோடத்தில் ஏற்கனவே இருக்கும் பெரிய தென்னை மரங்கள் போக தோட்டம் ழுழுவதுக்கும் சுமார் 500 தென்னை கன்றுகள் நடவு செய்து அதை பாரமரிக்கதான் ஒருவரால் முடியாத காரணத்தால் ஸ்டேட் பாங் காலனியில் வசிக்கும் உசேன்கான் என்பவர் தனது மனைவியின் மகபூ பேகத்தின் பேரில் குத்தைகை பேசி கடந்த 21-04-2010-ல் வருடத்திற்கு ரூ 50 ஆயிரம் என்று பேசி ஊடு பயிர் செய்ய விடடிருக்கிறார். தற்போது, அதாவது இரண்டு வருடம் கழித்த பிறகு அந்த இடத்தில் நாங்கள் சென்று பார்க்கும் பொழுது சுமார் 40 தென்னை கன்றுகள் அழிந்த நிலையிலும் மற்ற கன்றுகள் இருந்த இடம் தெரியாமலும் கிடந்ததது. பெரிய தென்னை மரங்களும் தண்ணீர் விடப்படமால் மட்டைகள் காய்ந்து ஒரு பாளையே, குறும்பையே இல்லமால் காணப்படுகிறது. இந்த நிலையில் தான் வெட்டிய கரும்பு சோகைகளை பெரிய தென்னை மரத்தின் அடியில் இட்டு மரங்கள் காய்ந்து போகும் அளவுக்கு தீயிட்டுள்ளனர். இதற்கு விவசாய சங்கம்மோ, காவல்துறையோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பத்திரிக்கையாளர்களையாவது சந்திந்து தனது அவள நிலையை வெளியுலகிற்கு தெரியபடுத்த முயற்ச்சித்துள்ளார். இந்த சோக நிகிழ்ச்சியை பத்திரிகைளிலும் வெளியிட்டுள்ளார் குத்தைகை பெற்றவர்கள் தாகதவர்த்தைகளில் திட்டியும் கொலை முயற்ச்சியும் செய்து வருகின்றனர். காவல்துறையில் வழக்குபதிவும் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. முதல் தகவல் அறிக்கையும் போட்டு 6 மாதகாலமாகியும் காவல்துறை அவர்களை விசாரிக்கவோ, கைது செய்யவோ மறுத்துவிட்ட நிலையில் தற்பொழுதும் கொலை மிரட்டல்களும் செய்து வருகின்றனர். இந்த அம்மையாருக்கு கனவரும் இறந்துவிட்டார், பிள்ளைகளும் கிடையாது வேறு எந்த துனையும் கிடையாது இவர் செய்வதை அரியாது தவிர்த்து கொணடு இருக்கிறார். இந்த ஆதராவற்ற பெண்மணிக்கு காவல்துறை பொருப்புடன் நடவடிக்கை எடுக்குமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
-இணைய செய்தியாளர்- இயேட்வேர்டு