கம்பம், தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள எழில்மிகு கிராமம் காமயகவுண்டன்பட்டியில் அமைந்துள்ளது காந்தி ஆலையம். இங்கு அக்டோபர் 2 அன்று காந்தி பிறந்த நாளில் காலையிலிருந்தே கிராம மக்கள் அனைவரும் பூஜித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஆலயத்தின் சிறப்பு : மகாத்மா காந்தியடிகள் இறந்தபின்பு அவரது அஸ்தியை இங்குள்ள கிராமமக்கள் எடுத்து வந்து காமயகவுண்டன்பட்டியில் வைத்து வணங்கிவிட்டு பின்பு அஸ்தியை சுருளியருவியில் சென்று கரைத்தனர்.
அஞ்சலி செலுத்திய கிராமமக்கள் அவ்விடத்திலியோ மகாத்மா காந்தியடிகளுக்கு நினைவு ஆலயம் எழுப்பி வணங்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாது இன்றுவரை வாரம்தோறும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜையும் நடத்திவருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க காந்தி ஆலயம் தென் இந்தியாவிலேய தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியில் தான் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. தற்போது இங்கு ஆலயத்தை புதுப்பிக்கும் வேலை நடந்துவருகிறது. பொதுமக்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு, ஆலய கட்டுமான பணிக்கு நதி அளித்து உதவுமாறும் கிராமக்களும், ஆலயகுழு உறுப்பினர்களும் கேட்டுக்கொள்கின்றனர்.
-ஜிவா, ராணா செந்தில்