தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வேன், லாரி ஓட்டுநர்கள் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். டீசல் விலை உயர்வு மற்றும் ஆயுட்கால வரி விதிப்பு ஆகியவற்றை கண்டித்து, ஆண்டிபட்டியில் வாகனங்களில் ஊர்வலமாக சென்ற ஓட்டுநர்கள், தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. டீசல் விலை உயர்வை கண்டித்து, திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்ணில் கறுப்பு துணி கட்டி நூதன முறையில் போராட்டம் நடந்தது. திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தேனி.K.ராஜா & A.P.சரவணன்