மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ : தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மீண்டும் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ளதால் விலையுயர்ந்த மரங்கள் தீயில் கருகி வருகின்றன.இந்த காட்டுத் தீயின் காரணமாக, சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக மழை பெய்து வந்ததால், காட்டுத் தீயின் பாதிப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இயற்கை வளங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தேனி முருகேஷ்