கொசுக்களை விரட்ட நாம் என்ன செய்வோம்? hit அல்லது beygon spray உபயோகிப்போம் இல்லாவிடில் allout liquid, goodknight liquid அப்படி எதாவது ஒரு இரசாயனப் பொருட்களை உபயோகிப்போம்.
எங்களிடம் உள்ள இயற்கைப் பொருட்களை வைச்சு எதாவது உபயோகப்படுத்தி இருக்கிறோமா? பதில் கூடுதலாக இல்லை என்றே வரும். இயற்கைப் பொருள்களை உபயோகித்தால் கெளரவக் குறைச்சல் எனற நினைப்பு அதிகமாகியுள்ளது கவலைக்குரியது. அதனால் இயற்கை பற்றி காலங்காலமாக நம் மூதாதையர் அறிந்து வைத்துள்ள அறிவை வரும் சந்ததிகள் இழக்கும் அபாயமும், செயற்கைப் பொருட்களால் ஏற்படும் பல தீங்குகள் பற்றிய விழிப்புணர்வும் அருகிச் செல்கின்றது.
கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் M.Phil., படிக்கின்ற மாணவி கிருஷ்ணவேணி சில மாதங்களா கொசுக்களை விரட்ட வேப்பங்கோட்டை மூலம் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். ஈரோட்டில் 2012ல் நடந்த இளைஞர் அறிவியல் விழாவில், கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் முதலாவது பரிசை வென்றார்.
இதைத் தமிழ்நாட்டில் எந்த மீடியாக்களும் சிறு செய்தியாகக்கூட வெளியிடவில்லை. நாமாவது இதை மக்களுக்கு எடுத்துச் செல்வோம் நண்பர்களே.
-பசுமைநாயகன்