வறட்சியால் பாதிக்கப்பட்ட தேனி மாவட்டத்தில் அமைச்சர்கள் குழு ஆய்வு நடத்ததாதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குறை தீர்ப்பு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
அமைச்சர்கள் குழு ஆய்வு நடத்தாத காரணத்தால், தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காத நிலை எற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள பல கண்மாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளதாக புகார் தெரிவித்தனர்.கண்மாய்கள் சரிவர தூர்வாரப்படவில்லை என்றும், இப்பிரச்னையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.