தேனி மாவட்டத்திற்கு மிக அருகே உள்ள குமுளி அருகே விமானதளம் அமைக்க
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து விமானதளம்
அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.
விமான தளத்திற்காக குமுளி அருகே அணைக்கரை என்ற இடத்தில் ஆயிரம் ஹெக்டேர்
நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இடுக்கி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில்
இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், பெரியாறு புலிகள் சரணாலயம்
பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த இடம் அமைந்துள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி கிடைத்ததை அடுத்து 100 கோடி ரூபாய் செலவில் விமான நிலையப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
விமானதளப் பணிகளை கேரள மாநில தொழில்துறை வளர்ச்சி நிறுவனம் மேற்கொள்ள
உள்ளது. முதல் கட்டமாக 500 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த
விமானதளத்தில் சிறிய ரக விமானங்களை இயக்க முடியும். இந்த தளம்
செயல்பாட்டுக்கு வந்தால் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகள் வருகையும்
வாசனைப்பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா