Color Socrling

தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9941681652e-mail : info@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9941681652 e-mail : info@thagavalthalam.com

உழவர்களுக்கு காவல்துறை தரும் தொல்லை


அத்மா இயற்கை விவசாய சங்கம் //நாங்கள் இயற்கை விவசாயமுறையில் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக காய்கறி தோட்டம் அமைத்து சிறப்பான முரையில் காய்விளைவித்து, அதனை கோவை, சேலம், போன்ற நகரங்களுக்கு விற்பனை செய்து பயன்பெற்று வருகிறோம். மதியம் 2 மணியளவில் தருமபுரி அறுகில் எங்கள் ஊரிலிருந்து புறப்படும் நாங்கள் 6-7 மணிக்குல் மார்கெட்டில் காய்கலை தரவேண்டும், 7 மணிக்கு மேல் அந்த காய்களை மார்கெட்ன் கமிசன் ஏஜெண்ட் விற்று 10 மணிக்கு பணம் தருவார் பெற்றுக்கொண்டு நாங்கள் வீடு திருப்புவோம். 


கடந்த 14/05/2012 அன்று ஞயிற்றுகிழமை அன்று கோவைக்கு 2100 kg, எடையுடன் கத்திரிக்காய்,பாகல் காய், புடலை காய், சுறைகாய் மற்றும் பீர்க்கன் காய்யுடன் pik up வண்டியில் எடுத்து சென்றுக்கொண்டு இருந்த வழியில் மேட்டூர் தாண்டி சென்றுகொண்டிருந்த போது டயர்வெடித்து பஞ்சர் ஆனது, அதனை சரிசெய்து தொடர்ந்து சென்றுக்கொண்டிருந்தோம். நேரம் ஆகிவிட்ட காரணத்தினால் பதட்டமாக செற்றுக்கொண்டு இருந்தோம், வழியில் தினமும் காவல்துறையினால் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் வரை தாமதமாகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை மார்கெட் வாகணங்களை அதவது கய்கறி, பால்,பழங்கள் கொண்டு செல்லும் வாகனங்களை நிறுத்தி பணாம் கேட்க்க மாட்டர்கள், ஆனால் சில நாட்களகவே மார்கெட் வண்டிகளை பெரும்தொந்தரவூ செய்கிறார்கள், பணம் கேட்கிறார்கள். வண்டி டாகுமேண்டுகளை பார்க்கவேண்டும் என கூரி 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை தமதம்செய்வதால் மாக்கெட் செல்ல தமதமாகிரது, எனவே எங்கள் பொருட்களுக்கு சரியான விளை கிடைக்காமல் போகிறது. சரியான நேரதிற்கு போய் சேரவேண்டும் என்ற காரணத்தினால் நாங்களும் பல முறை 20 – 200 ரூபய் வரை லஞ்சம் தந்து விட்டு சென்றுகொண்டு இருக்கிறோம், 

14/05/2012 அன்று கோவை மாநகரில் மேட்டுபாளையம் சலையில் சங்கனூர் சாலை இனைப்பில் இருக்கும் காவல்துறையினர் 30 நிமிடங்கள் வரை வண்டியை பிடித்து வைத்துகொண்டு பெரும் இம்சை செய்தனர். ஏற்கெனவே தமதமானதால் எங்களது அவசர நிலையை புரிந்துகொண்டு 2000 ருபாய் வரை பைன் போடுவோம், இல்லையெணில் 1000 ரூபாய் லஞ்சம் தா என கேட்டனர், தரமறுத்தால் 1 மணி நேரம் தமதபடுத்துவேம் என கூரி மிரட்டினர். எனவே M G R மார்கெட் அஸொசேசன் தலைவரும், S A vegetables கடை உறிமையளருமான s bashzeer அவர்களை தொடர்புகொண்டு நிலைமையை கூறினோம், உடனே அவர் உயர் காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினார். உடனே காவல்துறை கட்டுபாட்டறைலிருந்து வக்கி டாக்கி மூலம் எங்களை விடுவிக்குமாரு தகவல் வந்தது. அதற்கு பின்பு எங்களை பிடித்து வைத்து இருந்த காவலர் சற்று உசராக பேசிகிறர். சாரி சார் எங்க கடமைய தான் நாங்க செய்தோம், ஆனால் இப்போ நான் நேனச்சா கூட கேஸ் புக் செய்ய முடியும், எதுக்கு சார் மேல் அதிகாரிங்க கூட எல்லாம் புகார் சொல்லிங்க, இதுல அவங்களுக்கும் தான் கமிசன் இருக்கு. என பேசி எங்களை போக சொன்னார்.

மார்கெட்டில் 10 மணியளவில் காய் வந்து மிக குரைவான விளைக்கு விற்றது.

அடிக்கடி இதுபோல காவல்துறையினர் தொந்தரவு செய்து வருகின்றனர்.
ஒரு முறை சத்தியமங்களம் அருகில் ஒரு காவல்துறை அதிகாரி வழக்கம் போல வழி மரித்தார், இரண்டு 5 ரூபாய் கிழிந்த நோட்டை மடித்து தந்தோம், மிகுந்த மரியதையோடு, பாத்து போங்க சார் என அனுப்பி வைத்தார். 

சில இடங்களில் காவல்துறையினர் கூடவே இரவு நேரங்களில் அடி அட்களையும் வைத்து இருக்கின்றனர். காவலர் அறையில் இருப்பார். அடிஆல் தான் பணம் வசுலிப்பார். எனக்கு தெரிந்த ஒருவர் இதுபோன்ற அடியால் வேலை பார்கிறார், ஒரு நாள் இருவு வேலை முடித்து திரும்புகையில் 1000-2000 ரூபாய் வரை கொண்டு வருவாராம். காவலுருக்கெ தெரியாமல் அவரிடம் இருந்து இவர் ஆட்டையை போடுவாராம்.

சில மாதங்களுக்கு முன்பும் இம்மாதிரியான இடையூறுகள் வந்தபோது தருமபுரி ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் மனு ஒன்றை அளித்தோம், ஆனால் அதற்க்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
                             
                                                                                          இணையதள செய்தியாளர்:-டேவிட் ராஜா