கொலை மிரட்டல் மற்றும் நில அபகரிப்பு புகாரின் பேரில் பி.ஆர்.பி. கிரனைட் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட 3 பேர் மீது மதுரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக மதுரை ஒத்தக்கடை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரையில் போலீஸ் துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் பாபு என்பவர் ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில், தமக்கு சொந்தமான நிலத்தை பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு விற்கவேண்டும் என்று கேட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தை விற்க மறுத்ததால், கொலை செய்வதாக மிரட்டி நிலத்தை பறித்துக் கொண்டதாக மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸார் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது உறவினர்கள் தெய்வேந்திரன், முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிரனைட் முறைகேட்டு விவகாரத்தில் இவர்கள் 3 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். தேனி.K.ராஜா