பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தங்களை ஒளி அறக்கட்டளை வழங்கியது
தேனிமாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, பண்ணைபுரம் பேரூராட்சிக்குப்பட்ட மல்லிங்காபுரத்தில் பள்ளி, மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. அடிப்படை வசதி எதும் இல்லாத இந்த கிராமத்தில் தினமும் 75 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி ( Tution ) கற்ப்பித்து வருகிறார் ஒரு ஆசிரியை. ஒன்றாம் வகுப்பு முதல் 11 வகுப்பு வரையுள்ள 75 மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுபுத்தங்கள் வழங்கப்பட்டது. இதில் தந்தை இல்லாதவர்கள் நான்கு பேர், தாய் இல்லாதவர்கள் இரண்டு பேர் தாய் தந்தை இல்லாதவர்கள் மூன்றும் மற்றும் ஏழையிலும் ஏழையாக உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் ஒளி டிரஸ்ட் நிறுவனம், செய்லாளர், இயக்குனர் கலந்து கொண்டனர்கள் இதில் திரு.T.பவுன்சாமி அனைவரும் வரவேற்று பேசினர். சிறப்பு விருந்தினராக உத்தமபாளையில் கம்யூனிட்டி ஆஃப் கிரைஸ்ட் என்ற ஆலயத்தின் போதகர் Rev பிரின்ஸ் C.டேனியல்MA அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.
திருமதி. பாரதி மற்றும் திருமதி. வேளாங்கண்ணி இந்த நிகழ்ச்சி கலந்து கொண்டனர் நிறைவாக மல்லிங்காபுரம் திருமதி. கலாவதி நன்றி கூறினார்.
-இணைய செய்தியலாளர் : தேனி T. பவுன்சாமி, 08056363678